பிரதமர் மோடி தலைமையில் முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 கோடி கான்கிரீட் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

ஜூன் 9-ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்றது. இதற்குப் பிறகான முதல் அமைச்சரவை கூட்டம் ஜூன் 10-ல் பிரதமர் இல்லத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் `பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி கான்கிரீட் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது’. இந்த நடவடிக்கை மூலம் நகரங்கள், கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது வரை பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் சுமார் 4.21 கோடி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

2015-ல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. பயனாளிகளுக்கு கழிவறை வசதி, குடிநீர் இணைப்பு, எரிவாயு வசதி போன்ற பிற வசதிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் செய்து தரப்படுகின்றன.

இந்த மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு முன்பு காலை பிரதமர் அலுவலகம் சென்ற மோடி, விவசாயிகளுக்கு வருடம் 6 ஆயிரம் வழங்கும் பி.எம்.கிசான் உதவித்திட்டத்தின் கீழ் 20000 கோடி நிதியுதவி வழங்குவது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.

அதனைத் தொடர்ந்து `2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த லட்சியத்தை எட்ட பிரதமர் அலுவலக அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். பிரதமர் அலுவலகம் சேவை அலுவலகமாக மாற வேண்டும்’ எனப் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்தார் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in