சத்தீஸ்கரில் ஒரே நாளில் 30 நக்சல்கள் என்கவுன்டர்!

தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளராக இருக்கும் நம்பாலா கேசவ ராவின் தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் - கோப்புப்படம்
தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் - கோப்புப்படம்ANI
1 min read

தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட முன்னணி நக்சல் தலைவரான நம்பாலா கேசவ ராவ் உள்பட 30 நக்சல்கள் வரையில் பாதுகாப்புப் படையினரால் என்கவுன்டரில் இன்று (மே 21) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

முன்னணி நக்சல் தலைவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, இன்று காலை நாராயண்பூர், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் காவல்படையினர், சத்தீஸ்கரின் அபுஜ்மத் காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைத்து நக்சல்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது அவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்த்துள்ளது. இதில் கிட்டத்தட்ட 30 நக்சல்களை வரை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதில், தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளராக இருக்கும் நம்பாலா கேசவ ராவ் (எ) பசவராஜும் அடக்கம். முன்னணி நக்சல் தலைவராக 1970-களில் இருந்து நக்சலைட் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்துக்கொண்ட பசவராஜை, நாடு முழுவதும் பாதுகாப்புப் படைகள் தேடிவந்தன.

அவரது தலைக்கு ரூ. 1 கோடி சன்மானமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்துடனான சத்தீஸ்கரின் எல்லையில் அமைந்துள்ள பிஜாப்பூர் மாவட்டத்தின் காட்டுப்பகுதியில், கர்ரேகுட்டா மலைக்கு அருகில் வைத்து பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 15 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in