முதற்கட்ட மக்களவைத் தேர்தல்: 8 மத்திய அமைச்சர்கள் போட்டி

21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
முதற்கட்ட மக்களவைத் தேர்தல்: 8 மத்திய அமைச்சர்கள் போட்டி
முதற்கட்ட மக்களவைத் தேர்தல்: 8 மத்திய அமைச்சர்கள் போட்டிANI

நாளை முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாளை முதற்கட்ட வாக்குப் பதிவு 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் 8 மத்திய அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் 8 மத்திய அமைச்சர்களின் விவரம்:

1) தமிழ்நாட்டில் நீலகிரி தொகுதியில் பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல். முருகன்

2) அருணாச்சலப் பிரதேசம் மேற்குத் தொகுதியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

3) அஸ்ஸாமின் திப்ருகர் தொகுதியில் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால்

4) மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி

5) உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர் நகர் தொகுதியில் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பலியன்

6) ஜம்மு-காஷ்மீர் உதம்பூர் தொகுதியில் ஜிதேந்திர சிங்

7) ராஜஸ்தானின் ஆல்வார் தொகுதியில் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான பூபேந்திர யாதவ்

8) ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மஹாராஷ்டிரம், மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவுகள், உத்தரகண்ட், மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவுகள் என மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in