வாக்காளரைத் தாக்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

எம்எல்ஏ சிவக்குமார் தெனாலி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவுANI

வாக்குப்பதிவின் போது வாக்காளரைத் தாக்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குண்டூர் மாவட்டம் தெனாலி சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ சிவக்குமார் அத்தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று தனது வாக்கை செலுத்த வந்த சிவக்குமார் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்றதாகத் தெரிகிறது.

அப்போது வரிசையில் நின்ற வாக்காளர் ஒருவர் வரிசையில் நின்று அவரை வாக்களிக்க சொன்னதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த சிவகுமார் அந்த வாக்காளர் கன்னத்தைத் தாக்கினார். இதைத் தொடர்ந்து வாக்காளரும் பதிலுக்கு சிவகுமாரைத் தாக்க, அவரது ஆதரவாளர்கள் அந்த வாக்காளரை கடுமையாக தாக்கினர்.

இது தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாக பரவ, எம்எல்ஏ சிவக்குமாரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in