கேரளத்தில் கண்டிப்பாக தாமரை மலரும்: வாக்களித்துவிட்டு கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி

“கடந்த 15 ஆண்டுகளாக கேரளத்தில் இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. எனவே ஒரு மாற்றம் தேவை”.
மேனகா
மேனகா

கேரளத்தில் கண்டிப்பாக தாமரை மலரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளத்தில் உள்ள 20 தொகுதிகள் உட்பட மொத்தம் 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தாய் நடிகை மேனகா வாக்களித்துவிட்டு, “கேரளத்தில் கண்டிப்பாக தாமரை மலரும்” என கூறினார்.

அவர் பேசியதாவது: “கடந்த 15 ஆண்டுகளாக கேரளத்தில் இரண்டு கட்சிகள் (எல்டிஎஃப், யுடிஎஃப்) தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. எனவே எதிலும் ஒரு மாற்றம் இருப்பது அவசியம். கேரளத்திலும் ஒரு மாற்றம் வர வேண்டும். தாமரை மலரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. குறிப்பாக திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட சில தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். இருப்பினும் மக்கள் கையில் தான் வெற்றி உள்ளது. தாமரை மலரணும்னு தான் ஆசை. 10 முறை கீழே விழுந்தால், 11-வது முறை எழுந்திருக்க மாட்டார்களா?” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in