மஹாராஷ்டிரத்தில் மதியம் 3 மணி நிலவரப்படி 43.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது. ஏறத்தாழ 62 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிகபட்சமாக திரிபுராவில் மதியம் 3 மணி நிலவரப்படி 68.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக மஹாராஷ்டிரத்தில் 43.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு விவரம்:
அசாம் - 60.32%
பிஹார் - 44.24%
கர்நாடகம் - 50.93%
ஜம்மு-காஷ்மீர் - 57.76%
கேரளம்- 51.64%
மத்தியப் பிரதேசம் - 46.50%
உத்தரப் பிரதேசம் - 44.13%
சத்தீஸ்கர் - 63.32%
மேற்கு வங்கம் - 60.60%
மணிப்பூர் - 68.48%
திரிபுரா - 68.92%
மஹாராஷ்டிரம் - 43.01%
ராஜஸ்தான் - 50.27%