மக்களவைத் தேர்தல் 2024: பரப்புரை நிறைவு பெற்றது

ஜூன் 1 அன்று 57 மக்களவைத் தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
பரப்புரை நிறைவு பெற்றது
பரப்புரை நிறைவு பெற்றது

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைந்தது.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், இறுதிக்கட்ட பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

உத்தரப் பிரதேசம் (13 தொகுதிகள்), பீஹார் (8 தொகுதிகள்), ஒடிஷா (6 தொகுதிகள்), சண்டிகர் (1 தொகுதி), ஹிமாச்சல பிரதேசம் (4 தொகுதிகள்), பஞ்சாப் (13 தொகுதிகள்), மேற்கு வங்கம் (9 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்) ​என 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in