காலிஸ்தான் ஆதரவு மதபோதகர் முன்னிலை!

137780 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் அம்ரித்பால் சிங்.
காலிஸ்தான் ஆதரவு மதபோதகர் முன்னிலை!
காலிஸ்தான் ஆதரவு மதபோதகர் முன்னிலை!

சிறையில் உள்ள காலிஸ்தான் ஆதரவு மதபோதகர் அம்ரித்பால் சிங் பஞ்சாபில் முன்னிலை பெற்றுள்ளார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலத்தின் தீப்ருகர் சிறையில் உள்ள காலிஸ்தான் ஆதரவு மதபோதகரும், 'பஞ்சாப் தே' அமைப்பின் தலைவருமான அம்ரித்பால் சிங், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தின் கடூர் சாஹிப் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.

இன்று நடந்துவரும் வாக்கு எண்ணிக்கையில் 137780 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் அம்ரித்பால் சிங். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குல்பீர் சிங் ஜீரா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேலும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுக்கொன்ற அவரது மெய்க்காவலர் பியந் சிங்கின் மகன் சரப்ஜீத் சிங் கல்சா பஞ்சாப் மாநிலத்தின் ஃபரீத்கோட் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.

தற்போது நடந்துவரும் வாக்கு எண்ணிக்கையில் 60000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் சரப்ஜீத் சிங். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கரம்ஜித் சிங் அன்மோல் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in