நடிகை மியா கலிஃபா புகைப்படத்தை பார்த்து கர்வா சௌத் விரதத்தை முடித்த முதியவர்!

கணவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ, மனைவி கொண்டாடும் பண்டிகைதான் கர்வா சௌத்.
நடிகை மியா கலிஃபா புகைப்படத்தை பார்த்து கர்வா சௌத் விரதத்தை முடித்த முதியவர்!
1 min read

நடிகை மியா கலிஃபா புகைப்படத்தை பார்த்து முதியவர் ஒருவர் கர்வா சௌத் விரதத்தை முடித்தது பேசுபொருளாக மாறியுள்ளது.

கணவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ, மனைவி கொண்டாடும் பண்டிகைதான் கர்வா சௌத். பெண்கள், நிலவொளியில் சல்லடை மூலம் தனது கணவரின் முகத்தை பார்த்து இவ்விழாவை கொண்டாடுவார்கள்.

வடமாநிலங்களில் கர்வா சௌத் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்தப் பண்டிகை கடந்த அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிஹாரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கர்வா சௌத் விரதத்தை முடித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவியது. அந்த முதியவர் நடிகை மியா கலிஃபா புகைப்படத்தை பார்த்து கர்வா சௌத் விரதத்தை முடித்துள்ளார்.

இது பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட ஒரு காணொளி போன்று தெரிந்தாலும், ஒரு சிலர் மத உணர்வுகளை புண்படுத்த வேண்டாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in