இஸ்ரேல் - இந்தியா உறவு வலுவாக இருக்கிறது!: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் | Jaishankar |

இரு நாடுகளும் குறிப்பிட்ட பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை அனுபவித்து வருகிறோம்...
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியோன் சாருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு...
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியோன் சாருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு...ANI
1 min read

இஸ்ரேல் உடனான இந்திய உறவு, நம்பகத்தன்மையின் அடிப்படையில் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நடவடிக்கைக்குப் பிறகு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், முதன்முறையாக இந்தியா வந்துள்ளார். அவரை தில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். அதைத் தொடர்ந்து இருநாட்டு வெளியுறவுக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்சங்கர் கூறியதாவது:-

”இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்குமான உறவு உயர் தர நம்பகத்தன்மையின் அடிப்படையில் வலுவாகக் கட்டமைத்துள்ளது. இரு நாடுகளும் குறிப்பிட்ட பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை அனுபவித்து வருகிறோம். இதுவே இரு நாடுகளும் உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட அணுகுமுறையை நோக்கி நடக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டுள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அன்பான வரவேற்புகள். நாங்கள் முன்பு தொலைபேசியில் பேசி இருக்கிறோம். ஆனால் இன்று எங்கள் நேரடி விவாதத்தை நான் மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

சமீப காலங்களில், இந்தியா பல புதிய திறன்களை உருவாக்கி உள்ளது. குறிப்பாக ரயில், சாலை மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில். இஸ்ரேலில் உள்ள வாய்ப்புகளை ஆராய எங்கள் குழுவினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதற்கு நாங்கள் அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம்.

செமி கண்டக்டர் மற்றும் சைபர் துறைகளில் நம் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்த வரலாறுகள் உண்டு. இப்போது அவை மேலும் பொருத்தமாகத் தொடர்கிறது. 2026 பிப்ரவரியில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த உலகளாவிய உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதில் இஸ்ரேலின் பங்கேற்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

பிணைக் கைதிகளையும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் திருப்பி அனுப்பியுள்ள நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். காஸா அமைதி உடன்படிக்கையையும் ஆதரிக்கிறோம். இந்த உடன்படிக்கை நீடித்த தீர்வுக்கு வழி வகுக்கும் என நம்புகிறோம்” என்றார்.

Summary

External Affairs Minister S Jaishankar reaffirmed India's strong ties with Israel, calling the relationship one built on "a high degree of trust and reliability" while expressing support for the Gaza Peace Plan during his meeting with Israeli Foreign Minister Gideon Sa'ar in the national capital.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in