நீட் தேர்வு எதிர்ப்பு: போராட்டத்தை அறிவித்துள்ள திமுக, காங்கிரஸ்

நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால், அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
நீட் தேர்வு எதிர்ப்பு: போராட்டத்தை அறிவித்துள்ள திமுக, காங்கிரஸ்
1 min read

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 21-ல் காங்கிரஸும், ஜூன் 24-ல் திமுகவும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

நீட் தேர்வு வினாத் தாள் கசிந்ததாகவும், நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் சர்ச்சைகளை மேலும் வலுப்படுத்தின. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால், அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக ஜூன் 21-ல் போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஜூன் 21-ல் அனைத்து மாநிலத் தலைநகரிலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு மாநிலத் தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்களுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். இந்தப் போராட்டத்தில் மூத்த தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜூன் 24 காலை 9 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in