கர்நாடக முதல்வராக ஜனவரி 6-ல் பதவியேற்கிறார் டிகே சிவகுமார்? | DK Shivakumar |

"ஜனவரி 6 அல்லது ஜனவரி 9 ஆக இருக்கலாம். இதுதான் தேதிகள்."
DK Shivakumar to become Karnataka CM on January 6, says Congress MLA
சித்தராமையா, டி.கே. சிவகுமார் (கோப்புப்படம்)ANI
1 min read

கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் ஜனவரி 6 அன்று அம்மாநில முதல்வராகப் பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் ஹூசைன் செய்தியாளர்களிடம் கூறுகையில், டிகே சிவகுமார் முதல்வராவது 99 சதவீதம் உறுதி என்று தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. காங்கிரஸ் ஆட்சியில் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையா முதல்வர் பதவியில் தொடர்வார் என்று தொடக்கத்திலேயே முடிவு செய்யப்பட்டது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் துணை முதல்வராக உள்ள டிகே சிவகுமார் முதல்வர் பதவியில் தொடர்வார் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சிக்குள் குரல்கள் எழத் தொடங்கின. இப்பிரச்னையைத் தாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம் காங்கிரஸ் மேலிடம் நம்பிக்கை தெரிவித்தது.

இதன்படி சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் நேரில் சந்தித்து உணவருந்திக் கொண்டார்கள். இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களையும் சந்தித்துக் கொண்டார்கள். கட்சி மேலிடத்துக்குக் கட்டுப்படுவோம் என்பது இருவருடைய நிலைப்பாடாக உள்ளது.

இந்நிலையில், ஜனவரி 6 அன்று கர்நாடக முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்பார் என எம்எல்ஏ கூறியிருப்பது பெரும் செய்தியாக மாறியுள்ளது. கர்நாடக முதல்வராக டிகே சிவகுமார் ஜனவரி 6 அன்று பதவியேற்பார் என காங்கிரஸ் எம்எல்ஏ ஹூசைன் கூறியுள்ளார். மேலும், ஜனவரி 6-ஐ குறிப்பிட்டுச் சொல்வதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், "எனக்குத் தெரியாது. இதுவொரு பொதுவான தேதி தான். எல்லோரும் இதைத்தான் சொல்கிறார்கள். ஜனவரி 6 அல்லது ஜனவரி 9 ஆக இருக்கலாம். இதுதான் தேதிகள்" என்றார் அவர்.

டிகே சிவகுமாரின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டு வருபவர் ஹூசைன். டிகே சிவகுமார் முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என இவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

Karnataka CM | DK Shivakumar | Karnataka Congress | Siddaramaiah |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in