ஜெகன் மோகன் ரெட்டிக்கு லஞ்சம் கொடுக்க உறுதியளித்தாரா அதானி?: புதிய குற்றச்சாட்டு

ஆந்திர அரசுக்கும் அதானி குழுமத்துக்கும் எந்தவிதமான நேரடி ஒப்பந்தமும் இருந்தது இல்லை.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு லஞ்சம் கொடுக்க உறுதியளித்தாரா அதானி?: புதிய குற்றச்சாட்டு
1 min read

இந்திய சூரிய ஒளி எரிசக்தி (எஸ்.இ.சி.ஐ.) நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட, கடந்த ஆகஸ்ட் 2021-ல் அன்றைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு லஞ்சம் கொடுப்பதாக, தொழிலதிபர் கௌதம் அதானி உறுதி அளித்ததாக அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

அதிக விலைக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வாங்கும் வகையில் வகையில் பல்வேறு இந்திய மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்துத் தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றி அதானி குழுமம் முதலீடுகளை பெற்றதாகவும், அமெரிக்க நாட்டின் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் ஃபெடரல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்தது அமெரிக்க நீதிமன்றம்.

இந்த விவகாரத்தின் ஒரு பகுதியாக, கடந்த 2021 ஆகஸ்டில் அன்றைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து கௌதம் அதானி லஞ்சம் வழங்க உறுதியளித்ததாக அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் லஞ்சப் பணம் குறித்த எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், பெயர் குறிப்பிடப்படாத ஆந்திர அரசு அதிகாரி ஒருவருக்கு அதானி நிறுவனம் சார்பில் ரூ. 1750 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதற்குப் பிறகே அன்றைய ஆந்திர அரசு எஸ்.இ.சி.ஐ. நிறுவனத்திடம் இருந்து 7 ஜிகாவாட் மின்சாரம் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க சட்டத்துறை புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, `ஆந்திர அரசுக்கும் அதானி குழுமத்துக்கும் எந்தவிதமான நேரடி ஒப்பந்தமும் இருந்தது இல்லை. கடந்த 2021-ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் எஸ்.இ.சி.ஐ.க்கும், மாநில மின்சார விநியோக நிறுவனத்திற்கும் இடையேதான் இருந்தது. மாநில அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது’ என விளக்கமளித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in