இண்டிகோ விமான சேவைகளை 5% குறைக்க வேண்டும்: விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு | IndiGo |

நவம்பர் 2025 அட்டவணையில் விமானங்களைச் சரிவர இயக்கத் தவறிவிட்டது இண்டிகோ....
இண்டிகோ விமானம் (கோப்புப்படம்)
இண்டிகோ விமானம் (கோப்புப்படம்)
2 min read

இண்டிகோ நிறுவனம் தனது விமான சேவைகளை 5% வரை குறைக்க வேண்டும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. குறைக்கப்படும் சேவைகள் பிற விமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம், கடந்த சில நாள்களாக விமான சேவை ரத்து, விமான தாமதம் எனப் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் நிலை உருவானது. இதையடுத்து, மற்ற நிறுவனங்களின் விமான டிக்கெட்டுகளைப் பெற பயணிகள் ஆர்வம் காட்டினர். இதனால் விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தன.

சராசரியாக ரூ. 10,000 - ரூ. 20,000 வரை இருக்கும் விமான டிக்கெட் கட்டணங்கள் ரூ. 1 லட்சத்தைத் தொட்டன. இதனால் பயணிகள் விமானங்களில் பயணிக்க முடியாத நிலை உருவானது. அவசர பயணம் மேற்கொள்ள விமானங்களை நாடுபவர்களுக்கும் சிக்கல் உருவானது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கி, மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான டிக்கெட் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, விமான டிக்கெட் கட்டணத்திற்கு உச்ச வரம்பை நிர்ணயித்தது. அதன்படி குறுகிய உள்நாட்டு வழித்தடங்களில் 500 கி.மீட்டர் வரையிலான பயணத்திற்கு ரூ. 7,500, 500 முதல் 1,000 கி.மீட்டர் தூரம் வரை ரூ. 12,000, 1000 முதல் 1500 கி.மீட்டர் தூரம் வரை ரூ. 15,000 மற்றும் 1,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் ரூ.18,000 வரை கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இண்டிகோ விமான சேவைகளை 5% வரை குறைக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் இண்டிகோ நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இண்டிகோ நிறுவனம் கடந்த 2024-ன் குளிர்கால அட்டவணையுடன் ஒப்பிடும்போது 9.66% அதிகம் விமானங்களை இயக்கியுள்ளது. அதேபோல் 2025-ன் கோடைக்கால அட்டவணையை விட தற்போது 6.05% கூடுதல் விமானங்களை இயக்கியுள்ளது. ஆனால், தற்போது அமைக்கப்பட்டுள்ள குளிர்கால அட்டவணையை சரிவர இயக்கத் தவறிவிட்டது. இதனால் வருங்காலத்தில் இயக்கும் விமானங்களின் அளவில் 5% விமானங்களைக் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு விமான சேவைகளைக் குறைக்க வேண்டும். திருத்தப்பட்ட விமான சேவைகளின் பட்டியலை டிசம்பர் 10 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அக்டோபரில் 15,014 வாராந்திர விமான சேவைகளுக்கு ஒப்புதல் அளித்த போதிலும் விமான நிறுவனம் அவ்வளவு விமானங்களை இயக்க முடியவில்லை. குறைக்கப்படும் சேவைகள் பிற விமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Directorate General of Civil Aviation has ordered IndiGo to reduce its flight services by up to 5%. It has also said that the reduced services will be allocated to other airlines.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in