நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களிடத்தில் கல்வியறிவு குறைவு: அசாம் முதல்வர்

மருத்துவப் படிப்புக்கான தேர்வு முறை வெளிப்படையாக இருக்க அசாம் முதல்வர் வைத்த மூன்று முக்கியக் கோரிக்கைகள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களிடத்தில் கல்வியறிவு குறைவாக இருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் தேர்வு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விளக்கமளித்தார்.

"நீட் போன்ற தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்ற போதிலும், நிறைய மாணவர்களின் செய்முறை மற்றும் கல்வியறிவு குறைவாகவே இருப்பதாக பேராசிரியர்கள் பலர் கூறுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புப் பிரிவைக் கேட்டுக்கொண்டோம்.

தில்லியிலிருந்து தேர்வு நடத்தப்படுவதால், இதில் நாங்கள் தலையிடாமல் இருந்தோம். மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது தொடர்பாக மூன்று முடிவுகளை அமைச்சரவையில் எடுத்துள்ளோம்.

  1. முதலில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை அரசுப் பள்ளிகளில் நடத்த வேண்டும்.

  2. மாவட்ட ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமை மற்றும் கல்வி அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கவுள்ளோம்.

  3. மூன்றாவது, நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வறைக்குச் செல்லும் முன் பயோமெட்ரிக் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், மருத்துவப் படிப்புக்கான தேர்வு முறை வெளிப்படையாக இருக்கும் என நம்புகிறேன்" என்று அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in