தில்லி மருத்துவமனையில் தீ விபத்து: 6 பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பு

ராஜ்கோட்டில் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில், இதே நாளில் மற்றொரு தீ விபத்தில் 6 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தில்லி மருத்துவமனையில் தீ விபத்து: 6 பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பு

தில்லியின் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 6 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

தில்லி தீயணைப்புத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:

"குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. காப்பாற்றப்பட்டுள்ள 6 குழந்தைகளில் ஒரு குழந்தை வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளது. மீதமுள்ள 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டுள்ள குழந்தைகள் கிழக்கு தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன."

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ராஜேஷ் கூறியதாவது:

"இரவு 11.32 மணியளவில் தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அங்கு தீ முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் இரு கட்டடங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதில் ஒன்று மருத்துவமனையின் கட்டடம். மற்றொன்று, அருகிலிருந்த குடியிருப்புக் கட்டடத்தின் இரு தளங்கள்" என்றார் அவர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்த நிலையில், இதே நாளில் மற்றொரு தீ விபத்தில் 6 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குழந்தைகள் நல மருத்துவமனையின் உரிமையாளர் தலைமறைவாக உள்ளார். அவருக்கு எதிராக இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் விரைவில் குணமடைய வேண்டிய பிரார்த்திப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in