அரவிந்த் கெஜ்ரிவாலிடம் என்ஐஏ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை

பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்புகளிடமிருந்து ஆம் ஆத்மி 16 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியாகப் பெற்றதாக துணைநிலை ஆளுநருக்குப் புகார் வந்துள்ளது.
தில்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா (கோப்புப்படம்)
தில்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா (கோப்புப்படம்)ANI

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என தில்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா பரிந்துரைத்துள்ளார்.

தேவேந்திர பால் புல்லாலரை விடுவிப்பது மற்றும் காலிஸ்தான் ஆதரவு உணர்வுகளை ஆதரிக்க பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்புகளிடமிருந்து 2014 மற்றும் 2022 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 16 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியாகப் பெற்றதாக துணைநிலை ஆளுநருக்குப் புகார் வந்துள்ளது.

உலக ஹிந்து கூட்டமைப்பின் தேசியப் பொதுச்செயலாளர் அஷு மோங்கியா என்பவர், தில்லி துணைநிலை ஆளுநரிடம் இதுதொடர்பாக புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த தில்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா மத்திய உள்துறைச் செயலரிடம் பரிந்துரை செய்துள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in