தில்லி மதுபானக் கொள்கை: கெஜ்ரிவாலைக் கைது செய்தது சிபிஐ

இதே வழக்கில் அமலாக்கத் துறையால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
தில்லி மதுபானக் கொள்கை: கெஜ்ரிவாலைக் கைது செய்தது சிபிஐ
1 min read

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிபிஐயால் முறைப்படி கைது செய்யப்பட்டார்.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலைக் கைது செய்து விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

தில்லி சிறப்பு நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வு நீதிபதி கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து, கெஜ்ரிவால் சிபிஐயால் முறைப்படி கைது செய்யப்பட்டார்.

logo
Kizhakku News
kizhakkunews.in