தில்லி குண்டு வெடிப்பு: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு | Delhi Bomb Blast |

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...
தில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்வு
தில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்வு
1 min read

தில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தலைநகர் தில்லியில் செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10 அன்று சாலையோரம் மெதுவாகச் சென்ற கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அருகருகே இருந்த வாகனங்களிலும் தீப்பிடித்ததால் பாதசாரிகள் பலரும் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 12 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயங்களுடன் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

இதனிடையே சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கிய தேசிய புலனாய்வு முகமையினர், இது தற்கொலைத் தாக்குதல் என்றும், குண்டு வெடிப்பு சம்பவம் என்றும் கண்டறிந்தனர். மேலும், இதில் தொடர்புடைய ஐந்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவர்கள் என்பதும், ஹரியானாவில் உள்ள அல் ஃபலாஹ் மருத்துவமனையில் பணியாற்றியவர்கள் என்பதும் தெரிய வந்தது. கைதானவர்களிடம் இருந்து வெடிபொருள்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கடந்த நவம்பர் 14 அன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து இன்று மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க இருவர் உயிரிழந்துள்ளார்கள். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

Summary

The death toll from the November 10 blast near the Red Fort has now reached 15. Two more individuals succumbed to their injuries at LNJP Hospital. This brings the total number of fatalities from the high-intensity explosion to 15.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in