வங்கக் கடலில் 'ரீமல்' புயல் உருவானது

புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 110 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வங்கக் கடலில் 'ரீமல்' புயல் உருவானது

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ரீமல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது தொடர்ந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை காலை தீவிரப் புயலாக வலுப்பெறவுள்ளது.

ரீமல் புயலானது மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகள் மற்றும் வங்கதேசத்தின் கெபுபாரா பிராந்தியத்துக்கு இடையே மே 26 நள்ளிரவில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 110 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

ரீமல் புயலால் மேற்கு வங்கத்தில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கொல்கத்தா துறைமுகம் ஞாயிற்றுக்கிழமை இரவு அனைத்து செயல்பாடுகளையும் ரத்து செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கொல்கத்தா விமான நிலையத்தில் சுமார் 9 மணி நேரத்துக்கு அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in