மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பாஜக மத்திய அமைச்சர்கள்!

இந்தத் தேர்தலில் கேபினட் அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி, அர்ஜுன் முண்டா, மஹேந்திர நாத் பாண்டே, ஆர்.கே.சிங் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பாஜக மத்திய அமைச்சர்கள்!

மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் பரபரப்பில் பாஜக ஈடுபட்டு வந்தாலும், அக்கட்சிக்கு இந்த முறை அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத்தால் கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைக்கிறது.

இந்தத் தேர்தலில் பாஜகவின் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட 20 மத்திய அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர். அவர்களின் விவரங்கள் பின்வருமாறு

உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் கட்சியின் கே.எல்.சர்மாவிடம் 1.67 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரிடம் 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

உத்தரபிரதேசத்தின் கேரி தொகுதியில் போட்டியிட்ட அஜய் மிஸ்ரா டெனி, சமாஜ்வாதி கட்சியின் உத்கர்ஷ் வர்மாவிடம் 1.67 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தி தொகுதியில் போட்டியிட்ட அர்ஜுன் முண்டா காங்கிரஸ் கட்சியின் காளிசரண் முண்டாவிடம் 1.49 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் தொகுதியில் போட்டியிட்ட கைலாஷ் சவுத்ரி காங்கிரஸ் கட்சியின் உம்மேடா ராம் பெனிவாலிடம் 4.48 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

உத்தரபிரதேசத்தின் சன்டெளலி தொகுதியில் போட்டியிட்ட மஹேந்திர நாத் பாண்டே சமாஜ்வாதி கட்சியின் பிரேந்திர சிங்கிடம் 21000 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் திமுகவின் ஆ.ராசாவிடம் 2.32 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பீஹாரின் ஆராஹ் தொகுதியில் போட்டியிட்ட ஆர்.கே.சிங் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாமா பிரசாத்திடம் 59 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கேரளாவின் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிட்ட வீ.முரளீதரன் காங்கிரஸ் கட்சியின் அடூர் பிரகாஷிடம் 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

உத்தரபிரதேசத்தின் ஃபதேபூர் தொகுதியில் போட்டியிட்ட சாத்வி நிரஞ்சன் ஜோதி சமாஜ்வாதி கட்சியின் நரேஷ் சந்திராவிடம் 33 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மஹாராஷ்டிர மாநிலம் ஜால்னா தொகுதியில் போட்டியிட்ட ராவ்சாகிப் தான்வே காங்கிரஸ் கட்சியின் கல்யாண் காலேவிடம் 1.01 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மேற்கு வங்க மாநிலம் கூச் பெகார் தொகுதியில் போட்டியிட்ட நிசித் பிரமானிக் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஜகதீஷ் சந்திராவிடம் 39 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மேற்கு வங்க மாநிலம் பங்குரா தொகுதியில் போட்டியிட்ட சுபாஷ் சர்க்கார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அரூப் சக்கரவர்த்தியிடம் 32 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

உத்தரபிரதேசத்தின் முசாஃபர்பூர் தொகுதியில் போட்டியிட்ட சஞ்ஜீவ் பால்யான் சமாஜ்வாதி கட்சியின் ஹரேந்திர சிங் மல்லிக்கிடம் 24 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

உத்தரபிரதேசத்தின் மோஹன்லால் கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட கவுஷல் கிஷோர் சமாஜ்வாதி கட்சியின் ஆர்.கே.சவுத்ரியிடம் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மஹாராஷ்டிர மாநிலம் பிவண்டி தொகுதியில் போட்டியிட்ட கபில் மோரேஷ்வர் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் சுரேஷ் கோபினாத்திடம் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மஹாராஷ்டிர மாநிலம் டிண்டோரி தொகுதியில் போட்டியிட்ட பார்தி பவார் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் பாஸ்கர் முர்ளிதரிடம் 1.13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கர்நாடக மாநிலத்தின் பிதர் தொகுதியில் போட்டியிட்ட பகவந்த் குபா காங்கிரஸின் சாகர் ஈஸ்வரிடம் 1.28 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தா தொகுதியில் போட்டியிட்ட தெபஸ்ரீ சவுத்ரி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாலா ராயிடம் 1.87 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

உத்தரபிரதேசத்தின் ஜலாவுன் தொகுதியில் போட்டியிட்ட பானு பிரதாப் சிங் சமாஜ்வாதி கட்சியின் நாராயண் தாஸிடம் 53 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in