சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரம்: 7 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

கன்னியாகுமரியில் விஜய் வசந்த், கரூரில் ஜோதிமணி, திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில் ஆகியோர் போட்டி
கார்த்தி சிதம்பரம் (கோப்புப்படம்)
கார்த்தி சிதம்பரம் (கோப்புப்படம்)ANI

தமிழ்நாட்டில் 7 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அஸ்ஸாம், ஜம்மு & காஷ்மீர், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம், மணிப்பூர், மிசோரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம், அந்தமான் நிகோபர் தீவுகள், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 46 மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் மொத்தம் 9 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், 7 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

  • திருவள்ளூர் (தனி) - சசிகாந்த் செந்தில்

  • கிருஷ்ணகிரி - கே. கோபிநாத்

  • கரூர் - ஜோதிமணி

  • கடலூர் - எம்.கே. விஷ்ணு பிரசாத்

  • சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்

  • விருதுநகர் - மாணிக்கம் தாகூர்

  • கன்னியாகுமரி - விஜய் வசந்த்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in