‘கோல்ட் பிளே’ அணியினரின் இசைநிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை வேகமாக முடிந்தததைத் தொடர்ந்து கூடுதலாக மற்றொரு நாளில் இசைநிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் அடுத்தாண்டு ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் பிரபல இசைக் குழுவான ‘கோல்ட் பிளே’ அணியினரின் இசைநிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டிய நிலையில் புக் மை ஷோ இணையதளம் முடங்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அது சரிசெய்யப்பட்ட பிறகு டிக்கெட் விற்பனை வேகமாக முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் கூடுதலாக மற்றொரு நாளில் (ஜனவரி 21 அன்று) இசைநிகழ்ச்சி நடத்தப்படும் என ‘கோல்ட் பிளே’ குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.