தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு

நாட்டில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், 24 மணி நேரமும் 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் அச்சுறுத்தல் இருப்பதால் ராஜீவ் குமாரின் பாதுகாப்பை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

உளவுத் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் மூலம், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் ராஜீவ் குமாருக்குப் பாதுகாப்பு அளிக்கவுள்ளார்கள். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இரவு பகல் பாராமல் நாடு முழுக்கப் பயணிக்க வேண்டிய தேவை ஏற்படலாம் என்பதால், 24 மணி நேரமும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. நாட்டில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், தில்லியில் இருக்கும் நேரத்திலும் இவருக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்கவுள்ளார்கள்.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in