சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு | Train Accident |

10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது...
சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு
1 min read

சத்தீஸ்கரில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் பயணிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த கோர்பா பயணிகள் ரயில். ஜெய்ராம்நகர் நிலையத்தை கடக்கும்போது, எதிரே வந்த சரக்கு ரயில் திடீரென மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு ரயில்களும் மோதியதில், ரயிலுக்குள் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர். மேலும் இதுவரை 4-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், ரயில்வே நிர்வாகம் உடனடியாக மீட்பு மற்றும் மருத்துவ அணிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பியது. ரயில் பாதையில் சிக்கிய பயணிகளை வெளியேற்ற, ரயில்வே காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே மருத்துவக் குழு விபத்து இடத்திலேயே அவசர சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளது. காயமடைந்தவர்கள் பிலாஸ்பூர் மற்றும் கொர்பா அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்தவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் தற்போது உறுதி செய்து வருகின்றனர்.

விபத்தின் துல்லியமான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பகட்ட தகவல்களில், சிக்னல் பிழை அல்லது மனித தவறால் இந்த மோதல் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.

Summary

In Chhattisgarh, four passengers tragically lost their lives in an accident where a passenger train collided with a goods train.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in