வருமான வரியில் புதிய மாற்றம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு மக்களவையில் இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையின் இறுதியில் புதிய வருமான வரி விதிப்பு முறை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
புதிய வருமான வரி விதிப்பு முறையின் படி, 3 லட்சம் வரை இருக்கும் ஆண்டு வருமானத்துக்கு வரி இல்லை. 3 லட்சம் முதல் 7 லட்சம் வரை 5 % வரி, 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை 10 % வரி, 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை 15 % வரி, 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20 % வரி, 15 லட்சத்துக்கும் மேல் 30 % வரி.
பழைய வருமான வரி விதிப்பு முறையில் 3 லட்சம் வரை இருக்கும் ஆண்டு வருமானத்துக்கு வரி இல்லை. 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை 5 % வரி, 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை 10 % வரி, 9 லட்சம் முதல் 12 லட்சம் வரை 15 % வரி, 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20 % வரி, 15 லட்சத்துக்கும் மேல் 30 % வரி.
மேலும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு மத்திய அரசால் விதிக்கப்பட்டு வந்த `ஏஞ்சல் வரி’ முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.