குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் 14 பேருக்குக் குடியுரிமை

"குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, முதன்முறையாக இன்று குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன."
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் 14 பேருக்குக் குடியுரிமை
ANI

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் 14 பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, முதன்முறையாக இன்று குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்கள் சிலருக்கு மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா குடியுரிமைக்கான சான்றிதழ்களை இன்று தில்லியில் வழங்கினார்.

விண்ணப்பதாரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த உள்துறைச் செயலர் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விவரித்தார்."

குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பர் 2019-ல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் கடந்த மார்ச் 11 முதல் நடைமுறைக்கு வந்தது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்குப் புலம்பெயரும் முஸ்லிம்கள் நீக்கமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களுக்கு இந்திய குடியுரிமையைத் துரிதமாக வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்துக்கு நாடு முழுக்க போராட்டம் வெடித்தது. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in