மோடி 3.0: மத்திய அமைச்சர்களுக்குத் துறைகள் அறிவிப்பு

பிரதமர் மோடிக்குப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை
மோடி 3.0: மத்திய அமைச்சர்களுக்குத் துறைகள் அறிவிப்பு

மத்திய அமைச்சரவையில் துறைகளின் ஒதுக்கீடு பட்டியலை குடியரசுத் தலைவர் செயலகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

பிரதமர் நரேந்திர மோடி -

பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

அணுசக்தித் துறை

விண்வெளித் துறை

கேபினட் அமைச்சர்கள்

ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத் துறை

அமித் ஷா – உள்துறை, கூட்டுறவுத் துறை

நிதின் கட்கரி - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை

ஜெ.பி. நட்டா - சுகாதாரம், குடும்ப நலத் துறை, ரசாயனங்கள் மற்றும் உரத் துறை

ஷிவ்ராஜ் சிங் சௌஹான் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை,

நிர்மலா சீதாராமன் - நிதித் துறை, பெருநிறுவன விவகாரங்கள் துறை

ஜெய்சங்கர் - வெளியுறவுத் துறை

மனோஹர் லால் கட்டார் - எரிசக்தி அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை

ஹெச்.டி. குமாரசாமி - கனரகத் தொழில்கள் துறை, எஃகு துறை

பியூஷ் கோயல் - வர்த்தகம் மற்றும் தொழில் துறை

தர்மேந்திர பிரதான் – கல்வித் துறை

ஜிதன்ராம் மஞ்சி - குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை

ராஜீவ் ரஞ்சன் சிங் - பஞ்சாயத்து ராஜ் துறை

மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளம் துறை

சர்பானந்த சோனோவால் - கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை

வீரேந்திர குமார் - சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை

ராம்மோகன் நாயுடு - விமானப் போக்குவரத்துத் துறை

பிரல்ஹாத் ஜோஷி - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை,

ஜுவல் ஒரம் – பழங்குடியினர் நலத் துறை

கிரிராஜ் சிங் - ஜவுளித் துறை

அஷ்வினி வைஷ்ணவ் - தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, ரயில்வே துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை

ஜோதிராதித்ய சிந்தியா - வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத் துறை, தொலைத் தொடர்புத் துறை

பூபேந்திர யாதவ் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை

கஜேந்திர சிங் ஷெகாவத் - சுற்றுலா அமைச்சகம், கலாச்சாரத் துறை

அன்னபூர்ணா தேவி - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை

கிரண் ரிஜிஜு - நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, சிறுபான்மையினர் நலத் துறை

ஹர்தீப் சிங் புரி – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை

மன்சுக் மாண்டவியா - தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை

கிஷண் ரெட்டி - சுரங்கங்கள் அமைச்சகம் நிலக்கரித் துறை

சிராக் பாஸ்வான் - உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை

சி.ஆர். பாட்டீல் – ஜல்சக்தி துறை

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

ராவ் இந்திரஜித் சிங் – புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை, திட்டங்கள் துறை

ஜிதேந்திர சிங் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புவி அறிவியல் துறை

அர்ஜுன் ராம் மேக்வால் – சட்டம் மற்றும் நீதித் துறை

ஜாதவ் பிரதாப் ராவ் - ஆயுஷ் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை

ஜெயந்த் சௌத்ரி - திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை, கல்வித் துறை

இணை அமைச்சர்கள்

எல். முருகன் - தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை

சுரேஷ் கோபி - சுற்றுலா, பெட்ரோலியம், இயற்கை வாயு

ஜிதின் பிரசாத் - வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஸ்ரீபத் நாயக் - மின் துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை

பங்கஜ் சௌத்ரி - நிதித் துறை

ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மேம்பாட்டுத் துறை

ராம்நாத் தாக்குர் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை

நித்யானந்த் ராய் - உள்துறை விவகாரங்கள்

அனு பிரியா படேல் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உரங்கள் மற்றும் ரசாயனத் துறை

சோமண்ணா - ஜல் சக்தி மற்றும் ரயில்வே துறை

சந்திரசேகர் - ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை

எஸ்பி சிங் பாகெல் - மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை

ஷோபா கரண்ட்லாஜே - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை

கீர்த்தி வர்தன் சிங் - சுற்றுச்சூல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் துறை

பிஎல் வர்மா - உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் சமூக நீதி மேம்பாட்டுத் துறை

ஷாந்தனு தாக்குர் - துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் நீர்வழிகள் துறை

அஜய் டம்டா - சாலைப் போக்குவர்தது மற்றும் நெடுஞ்சாலைத்துறை

பண்டி சஞ்சய் குமார் - உள்துறை விவகாரங்கள் துறை

கம்லேஷ் பாஸ்வான் - ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர்

பகிராத் சௌதரி - வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை

சதீஷ் சந்திர துபே - நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை

சஞ்சய் சேத் - பாதுகாப்புத்துறை

ரவ்னீத் சிங் பிட்டு - உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை மற்றும் ரயில்வே

துர்கா தாஸ் - பழங்குடியினர் நலத்துறை

ரக்‌ஷா நிகில் கட்சே - விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை

சுகந்தா மஜும்தார் - கல்வி மற்றும் வட கிழக்கு மாகாண மேம்பாட்டுத் துறை

சாவித்ரி தாக்குர் - பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை

தோக்கன் சாஹு - வீட்டு வளர்ச்சி ஊரக விவகாரங்கள் துறை

ராஜ் பூஷண் சௌத்ரி - ஜல் சக்தி துறை

பூபதி ராஜு ஸ்ரீநிவாச ராஜு வெர்மா - கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் இரும்புத் துறை

ஹர்ஷ் மல்ஹோத்ரா - கார்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை

நிமுபென் பாம்பனியா - நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை

முரளிதர் மொஹோல் - கூட்டுறவு மற்றும் விமானப் போக்குவரத்து துறை

ஜார்ஜ் குரியன் - சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை

பவித்ர மார்கெரிடா - வெளியுறவு விவகாரங்கள் மற்றும் ஜவுளித்துறை

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in