சனாதன எதிர்ப்பில் உடன்பாடில்லை: காங்கிரஸிலிருந்து விலகிய கௌரவ் வல்லப்

ராஜினாமா கடிதத்தில், தன்னால் சனாதன எதிர்ப்பு முழக்கங்களை எழுப்ப முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கௌரவ் வல்லப் (கோப்புப்படம்)
கௌரவ் வல்லப் (கோப்புப்படம்)

மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கௌரவ் வல்லப் அறிவித்துள்ளார்.

கௌரவ் வல்லப் 2017-ல் காங்கிரஸில் இணைந்தார். கட்சியில் இணைந்தவுடன் தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகப் பங்கேற்று பிரபலமாக அறியப்பட்டார்.

2019-ல் ஜார்க்கண்டில் ஜாம்ஷெத்பூர் கிழக்கில் போட்டியிட்ட வல்லப், 18 ஆயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2023-ல் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் உதய்பூர் தொகுதியில் போட்டியிட்ட இவர், 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், தன்னால் சனாதன எதிர்ப்பு முழக்கங்களை எழுப்ப முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "காங்கிரஸ் கட்சி தவறான திசையை நோக்கி நகர்கிறது. ஒருபுறம் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறோம். மறுபுறம் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தையும் எதிர்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் கட்சி ஆதரவாக இருப்பதாக ஒரு தவறான செய்தியை மக்களிடம் கொண்டுசேர்க்கும். இது கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது" என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in