மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படியானது 53%-ல் இருந்து 55% ஆக உயர்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு
ANI
1 min read

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு, ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அகவிலைப்படியானது 53%-ல் இருந்து 55% ஆக உயர்கிறது. இதன்மூலம், 48.66 லட்சம் ஊழியர்கள் மற்றும் 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதன்மூலம், ரூ. 6,614 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்தாண்டு அகவிலைப்படியானது 3% உயர்த்தப்பட்டது. இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50%-ல் இருந்து 53% ஆனது.

அகவிலைப்படி உயர்வானது பின்தேதியிட்டு ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தால் ஏற்படும் பண மதிப்பு வீழ்ச்சி வாழ்க்கை செலவுகளில் ஏற்படுத்தும் பாதிப்பை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in