குடியுரிமை திருத்தச் சட்டம்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இந்த வழக்கு ஏப்ரல் 9-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ள மனுக்கள் மீது பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட அடுத்த நாள் குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்தார். எனினும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது. கடந்த 11-ம் தேதி முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தவுடன், இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முறையிடப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்தச் சட்டத்துக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு மூன்று வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 9-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in