முதல்முறையாக வேலைக்குச் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணி முதல் மக்களவையில் மத்திய பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
மத்திய பட்ஜெட்டைத் தொடர்ந்து ஏழாவது முறையாகத் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதில், புதிதாக பணியில் சேரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு மாத ஊதியம் (ரூ. 1 லட்சம் வரை) ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் இந்த தொகை ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியாக (பி.எஃப். கணக்கில்) வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், இத்திட்டம் அனைத்துத் துறைகளில் பணிபுரிவர்களுக்கும் பொருந்தும் என்றும், இதன்மூலம், 210 லட்ச இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.