.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி மாணவர்களுக்கு தொழில்பயிற்சி வழங்குவதற்கான திட்டம் தொடங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணி முதல் மக்களவையில் மத்திய பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
மத்திய பட்ஜெட்டைத் தொடர்ந்து ஏழாவது முறையாகத் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதில், 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி மாணவர்களுக்கு தொழில்பயிற்சி வழங்குவதற்கான திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். அவர்களுக்கு ரூ. 6000 ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். மேலும், 12 தொழில் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.