ரூ. 1-க்கு ஒரு மாதத்திற்கு 4ஜி சேவை: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு | BSNL | Freedom Plan | 4G

இந்தியாவில் சொந்தமாக உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை குடிமக்கள் இலவசமாக அனுபவிக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது.
ரூ. 1-க்கு ஒரு மாதத்திற்கு 4ஜி சேவை: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு | BSNL | Freedom Plan | 4G
1 min read

அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியாக, மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் 4ஜி சேவையை ரூ. 1-க்கு வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

அண்மையில் இந்தியா முழுவதும் 4ஜி நெட்வொர்க் சேவையை பி.எஸ்.என்.எல். முழுமையாக அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நேற்று (ஆக 1) வெளியிட்ட அறிக்கையில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் கூறியதாவது,

`பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.) இன்று (ஆக. 1) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ப்ரீடம் பிளான்'-ஐ அறிமுகப்படுத்தியது. ரூ. 1-க்கு ஒரு மாதத்திற்கு பி.எஸ்.என்.எல்.லின் 4ஜி மொபைல் சேவைகளை சோதிக்க பயனர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட சலுகை வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல்.லின் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை இந்த முயற்சி குறிக்கிறது மற்றும் இந்தியாவில் சொந்தமாக உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை குடிமக்கள் இலவசமாக அனுபவிக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில், இலவச சிம்முடன் வரம்பற்ற அழைப்புகள் (நாடு முழுவதும்), ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவுக்கு அதிவேக இணையம் மற்றும் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஏ ராபர்ட் ஜே ரவி கூறியதாவது,

`தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பி.எஸ்.என்.எல்.லின் 4ஜி வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்ததுள்ளது. எங்கள் `ப்ரீடம் பிளான் திட்டம்’ ஒவ்வொரு இந்தியருக்கும் 4ஜி உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாள்களுக்கு இலவசமாக சோதித்துப் பார்க்க வாய்ப்பளிக்கிறது.

அவர்கள் பி.எஸ்.என்.எல்.லில் வித்தியாசத்தை காண்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in