
ஜம்மு காஷ்மீர் அருகே இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவரை எல்லை பாதுகாப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது அத்துமீறி நுழைவது நடந்து வருகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.புரா பகுதிக்குள் நேற்று (செப். 7) இரவு அத்து மீறி உடுருவ முயன்ற ஒருவரை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அவரிடம் பாகிஸ்தான் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்து விசாரித்ததில் அவரது பெயர் சிராஜ் கான் என்பதும், அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சாப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இந்திய எல்லைக்குள் அவர் ஊடுருவியது ஏன் என்ற கேள்விக்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாகவும் தெரிய வருகிறது.
இதையடுத்து சமூக விரோத செயலைச் செய்வதற்காக அவர் உள்ளே நுழைந்தாரா? அவருக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளாதா என்பது போன்ற கோணங்களில் எல்லை பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர்.
Pakistani Intruder | Border Security Force | BSF | Jammu Kashmir | POK |