பாஜகவில் இணைந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்

குத்துச்சண்டையில் இந்தியாவுக்காக முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றார் விஜேந்தர் சிங்.
பாஜகவில் இணைந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்
பாஜகவில் இணைந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் @ANI
1 min read

பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இனணந்துள்ளார்.

2008 ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றார் விஜேந்தர் சிங். குத்துச்சண்டையில் இந்தியாவுக்காக முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற பெருமையும் இவருக்கு உண்டு.

அர்ஜுனா, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்ற விஜேந்தர் சிங் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தில்லியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இனணந்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in