மேற்கு வங்கத்தில் பி.எல்.ஓ. தற்கொலை: முதலமைச்சர் மமதா பானர்ஜி கண்டனம் | Special Intensive Revision |

இன்னும் எத்தனை உயர்கள் பறிபோக வேண்டும்? இந்தப் பணியில் எத்தனை உடல்களைப் பார்க்கப்போகிறோம்...?
மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி (கோப்புப்படம்)
மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி (கோப்புப்படம்)
1 min read

மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் அழுத்தம் காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு அரசு ஊழியர்கள் இதில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதனிடையே, மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ரின்கு டரப்டர் என்ற 54 வயது மதிக்கத்தக்க ஆசிரியை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் அழுத்தம் காரணமாக இன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையிலிருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றையும் அவரது குடும்பத்தினர் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரின்குவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக மேற்கு வங்கத்திலேயே ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்த சாந்திமோனி என்ற வாக்குச்சாவடி நிலை அலுவலரும் கடந்த 19 அன்று தற்கொலை செய்துகொண்டார். இச்செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

“ஆசிரியரும் வாக்குச்சாவடி நிலை அலுவலராகவும் இருந்த ரின்கு டரப்டர் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரான ரின்கு டரப்டார் இறப்பு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதற்கு முன் எழுதிய கடிதத்தில் தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டியிருக்கிறார். இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? சிறப்பு தீவிர திருத்தத்திற்கான இன்னும் எத்தனை உயர்கள் பறிபோக வேண்டும்? இந்தப் பணியில் எத்தனை உடல்களைப் பார்க்கப்போகிறோம்? இது மிகப்பெரும் எச்சரிக்கையாக மாறியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த ரின்கு டரப்டர் எழுதிய தற்கொலைக் கடிதத்தையும் இணைத்துள்ளார்.

Summary

A woman working as a Booth Level Officer (BLO) in West Bengal’s Nadia district was found dead at her residence on Saturday morning (November 22, 2025), with her family members claiming that she had been under considerable SIR work-related stress and died by suicide, police said.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in