தில்லி மாநகராட்சி வார்டு குழுக்களுக்கான தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய பாஜக

தில்லி மாநகராட்சித் தேர்தல் முடிந்து மேயர் பதவி ஏற்றிருந்தாலும், ஏறத்தாழ ஒரு வருடத்துக்கும் மேலாக மாநகராட்சியின் 12 வார்டு குழுக்களுக்கான தேர்தலில் நடைபெறவில்லை
தில்லி மாநகராட்சி வார்டு குழுக்களுக்கான தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய பாஜக
PRINT-87
1 min read

இன்று (செப்.04) நடைபெற்ற தில்லி மாநகராட்சியின் 12 வார்டு குழுக்களுக்கான தேர்தலில், 7 வார்டு குழுக்களைக் கைப்பற்றியுள்ளது பாஜக. இதில் 5 வார்டு குழுக்களை வென்றுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

கடந்த 2022 பிப்ரவரியில் 250 வார்டுகளுக்கான தில்லி மாநகராட்சிக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் 134 வார்டுகளை ஆம் ஆத்மியும், 104 வார்டுகளை பாஜகவும் வென்றன. தில்லி மாநகராட்சியை முதல் முறையாக ஆம் ஆத்மி கைப்பற்றியதை அடுத்து அக்கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் தில்லி மேயராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

தில்லி மாநகராட்சித் தேர்தல் முடிந்து மேயர் தேர்தெடுக்கப்பட்டிருந்தாலும் ஏறத்தாழ ஒரு வருடத்துக்கும் மேலாக மாநகராட்சியின் 12 வார்டு குழுக்களுக்கான தேர்தலில் நடைபெறவில்லை.

தில்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகள் 12 வார்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்தந்த வார்டு குழுக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டு உறுப்பினர்கள் தங்கள் வார்டு குழுவின் தலைவர், துணைத் தலைவர், நிலைக்குழு ஆகிய பொறுப்புகளுக்கு தங்களுக்குள்ளாகவே வாக்களித்து நபர்களைத் தேர்தெடுப்பார்கள்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற 12 வார்டு குழுக்களுக்காக தேர்தலில் 7 வார்டு குழுக்களை பாஜகவும், 5 வார்டு குழுக்களை ஆம் ஆத்மியும் கைப்பற்றியுள்ளன.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த 13-வது வார்டு பாஜக உறுப்பினரும், தில்லி மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவருமான ராஜா இக்பால் சிங், `கடந்த 2 வருடங்களாக டெல்லி மாநகராட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை. 12 வார்டுகளில் 7-ஐ நாங்கள் கைப்பற்றியுள்ளோம். இந்த வெற்றி தில்லி மக்களுக்கு மிகவும் முக்கியமானது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in