பாஜகவின் 6-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ராஜஸ்தான் மற்றும் மணிப்பூரில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் (கோப்புப்படம்)
பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் (கோப்புப்படம்)

மக்களவைத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் மணிப்பூருக்கான 3 வேட்பாளர்கள் இதில் இடம்பெற்றுள்ளார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் தௌசா தொகுதியில் கண்ணையா லால் மீனா போட்டியிடுகிறார். கரௌலி - தோல்பூர் தொகுதியில் இந்து தேவி ஜாதவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் தௌனோஜம் வசந்த குமார் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரிலும் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக இதுவரை 405 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. காங்கிரஸ் 190 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in