இந்தியா
அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைஸாபாத் தொகுதியில் பாஜக தோல்வி!
சமாஜ்வாதி வேட்பாளர் வரலாற்று வெற்றி!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவிலை உள்ளடக்கிய ஃபைஸாபாத் தொகுதியில் 50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத்!
பாஜக வேட்பாளர் லல்லு சிங் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தார்.
அயோத்தியிலுள்ள ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22-ல் நடைபெற்றது. அன்றைய நாளில் பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்து ராமரை வழிபட்டார்.

