காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்துள்ளது பாஜக: பூபீந்தர் சிங் ஹூடா குற்றச்சாட்டு

மக்களிடம் 2014-ன் தேர்தல் அறிக்கை உள்ளது. யாருக்கு ரூ. 15 லட்சம் கிடைக்கவில்லை, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை பெட்ரோல், டீசல் விலைகள் குறையவில்லை
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்துள்ளது பாஜக: பூபீந்தர் சிங் ஹூடா குற்றச்சாட்டு
PRINT-83
1 min read

ஹரியானா சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கு பாஜக வெளிட்ட தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், ஹரியானா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பூபீந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பாஜக நகலெடுத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹரியானா மாநில சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 5-ல் நடைபெற்ற உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனைப்போட்டி நிலவுகிறது. ஹரியானா பொதுத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை செப்.18-ல் வெளியிட்டது காங்கிரஸ் கட்சி.

அதில் 18 வயதைக் கடந்த பெண்களுக்கு மாதம் ரூ. 2000 உதவித்தொகை, முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கு ரூ. 6000 உதவித்தொகை, குடும்பங்களுக்கு ரூ. 500-க்கு எரிவாயு உருளைகள், 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு, 300 யூனிட் இலவச மின்சாரம் எனத் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை அளித்திருந்தது காங்கிரஸ் கட்சி.

இதை அடுத்து, நேற்று (செப்.19) ஹரியானா பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக. அதில் ஹரியானா பெண்களுக்கு மாதம் ரூ. 2,100 உதவித்தொகை, 2 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள், குடும்பங்களுக்கு ரூ. 500-க்கு ஒரு எரிவாயு உருளை எனப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.

பாஜக தேர்தல் அறிக்கை குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், `மக்களிடம் 2014-ன் தேர்தல் அறிக்கை உள்ளது. யாருக்கு இன்னமும் ரூ. 15 லட்சம் கிடைக்கவில்லை, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை பெட்ரோல், டீசல் விலைகள் குறையவில்லை. அவர்களுடைய தேர்தல் அறிக்கையை யாரும் நம்பவில்லை. எரிவாயு உருளை, உதவித்தொகை போன்ற காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை அவர்கள் நகல் எடுத்துள்ளனர்’ என்று குற்றம்சாட்டினார் பூபீந்தர் சிங் ஹூடா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in