பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மனைவியின் கார் திருட்டு

திருடுபோன காரை தேடிக் கண்டுபிடிக்க காவல் துறையினர் தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெ.பி. நட்டா (கோப்புப்படம்)
ஜெ.பி. நட்டா (கோப்புப்படம்)
1 min read

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவின் மனைவிக்குச் சொந்தமான விலை உயர்ந்த கார் திருடுபோயுள்ளது.

தென் கிழக்கு தில்லியில் கோவிந்தபுரியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது கார் திருடப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் தேதி மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் டிரைவர் ஜோகிந்தர், டொயோட்டா பார்ஃசூனர் காரை சர்வீஸ் செய்து கோவிந்தபுரிக்கு கொண்டுவந்து வீட்டின் முன் நிறுத்திவிட்டு உணவு சாப்பிடச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் யாரோ காரை திருடிச் சென்றுள்ளனர்.

நிர்வாகிகள் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் ஆய்வு செய்தபோது அந்த கார் குருகிராம் நோக்கிச் செல்வது தெரியவந்துள்ளது. எனினும் காரை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த கார் ஹிமாச்சல மாநிலப் பதிவு எண் கொண்டதாகும்.

திருடுபோன காரை தேடிக் கண்டுபிடிக்க காவல் துறையினர் தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in