மாநிலங்களவைத் தேர்தலில் நிதின் நபின் போட்டி: பாஜக அறிவிப்பு | Nitin Nabin | BJP |

தமிழ்நாட்டில் கனிமொழி சோமு, அந்தியூர் செல்வராஜ், தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, திருச்சி சிவா ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது....
BJP announces nine candidates for biennial Rajya Sabha polls; Nitin Nabin nominated from Bihar, Rahul Sinha from Bengal
மாநிலங்களவைத் தேர்தலில் நிதின் நபின் போட்டி: பாஜக அறிவிப்பு
1 min read

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 37 பேரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 7 இடங்களும், தமிழ்நாட்டில் 6 இடங்களும், பிஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 5 இடங்களும், ஒடிசாவில் 4 இடங்களும், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் தலா 2 இடங்களும், இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடமும் காலியாகின்றன.

தமிழ்நாட்டில் 6 இடங்களுக்குத் தேர்தல்

இதில், தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் கனிமொழி சோமு, அந்தியூர் செல்வராஜ், தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, திருச்சி சிவா ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, அவ்விடங்களுக்கான தேர்தல், வரும் வரும் மார்ச் 16 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இந்நிலையில், 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களில் பாஜக போட்டியிட இருக்கும் 9 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பாஜக தேசியத் தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட நிதின் நபின், பிஹார் மாநிலத்தில் இருந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன் பிஹார் மாநிலத்திற்காக சிவேஷ் குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல், அஸ்ஸாம் மாநிலத்திற்காக தரேஷ் கோவாலா, ஜோகென் மோகன்; சத்தீஸ்கர் மாநிலத்திற்காக லட்சுமி வர்மா; ஹரியானா மாநிலத்திற்காக சஞ்சய் பாட்டியா; ஒடிஷாவுக்காக மன்மோஹன் சமால், சுஜீத் குமார்; மேற்கு வங்கத்திற்காக ராகுல் சின்ஹா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Summary

BJP announces nine candidates for biennial Rajya Sabha polls; Nitin Nabin nominated from Bihar, Rahul Sinha from Bengal

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in