பிஹார் முதற்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது | Bihar Elections |

18 மாவட்டங்களில் 121 தொகுதிகளில் 45,341 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது...
பிஹார் மாநிலம் முங்கர் தொகுதியில் வாக்களித்த முதியவர்
பிஹார் மாநிலம் முங்கர் தொகுதியில் வாக்களித்த முதியவர்
1 min read

பிஹார் சட்டமன்ற தேர்தலில் முதல் 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்தல் 121 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. பிஹார் தலைநகர் பாட்னா, வைஷாலி, நாளந்தா, போஜ்பூர், சரண், பெகுசாராய், லக்கிசாராய், முசாபர்பூர், தர்பங்கா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கடந்த சில வாரங்களாக தேர்தல் ஆணையம் செய்து வந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தற்போது துணை முதலமைச்சர்களாக உள்ள சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா, மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி, அவரது சகோதரரும் ஜனசக்தி ஜனதா தலைவருமான தேஜ் பிரதாப், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,314 பேர் முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

முதற்கட்ட தேர்தலில் 3.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், பிஹார் சட்டமன்றங்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11 அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 நடைபெறவுள்ளது.

Summary

As Bihar gears up for the first phase of the Assembly elections, 121 constituencies across 18 districts will go to the polls on November 6. The counting of votes will take place on November 14.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in