பாரத ரத்னா விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரமுடியாத நிலையில் எல்.கே. அத்வானிக்கு, வீடு தேடி சென்று பாரத ரத்னா விருதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாரத ரத்னா விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்
பாரத ரத்னா விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்@rashtrapatibhvn
1 min read

பிகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர் உட்பட 4 பேருக்கு பாரத ரத்னா விருது இன்று வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், வேளான் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், பிகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர் மற்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்ப்பூரி தாக்குர், சரண் சிங், நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் வாரிசுகளிடம் பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளார்.

மேலும், எல்.கே. அத்வானி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரமுடியாத நிலையில், அவருக்கு வீடு தேடி சென்று பாரத ரத்னா விருதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in