பெங்களூரு காவல் ஆணையர் பணியிடை நீக்கம், குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம்!

பெங்களூருவில் ஆர்சிபி ரசிகர்கள் 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு காவல் ஆணையர் பணியிடை நீக்கம், குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம்!
ANI
1 min read

பெங்களூருவில் ஆர்சிபி ரசிகர்கள் 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக நகரின் காவல் ஆணையர் தயானந்த் உள்ளிட்ட ஆறு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்சிபி நிர்வாகத்தினர், கர்நாடக கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்சிபி அணி நிர்வாகி, கர்நாடக கிரிக்கெட் சங்கத்தினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆகியோரையும் கைது செய்ய முடிவு என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

18 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்றது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அடுத்த நாள் ஆர்சிபி அணி வீரர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் விராட் கோலி உள்ளிட்ட ஆர்சிபி வீரர்களும் பங்கேற்றார்கள். வீரர்களை நேரில் பார்க்கவும் இவ்விழாவில் கலந்துகொள்ளவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானம் முன்பு திரண்டார்கள். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தார்கள். 47 பேர் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்த 11 பேரின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் கர்நாடக அரசும் ஆர்சிபி அணியும் தலா ரூ. 10 லட்சமும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் தலா ரூ. 5 லட்சமும் வழங்கியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in