Breaking News

அட்டாரி வாகா எல்லையில், மீண்டும் இன்று (மே 20) முதல் கொடியிறக்க நிகழ்வு!

இரு நாடுகளுக்கு இடையிலான இந்த கொடியிறக்க நிகழ்வு 1959 முதல் நடைபெற்று வருகிறது.
அட்டாரி வாகா எல்லையில், மீண்டும் இன்று (மே 20) முதல் கொடியிறக்க நிகழ்வு!
ANI
1 min read

கடந்த ஏப்.22-ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான அட்டாரி வாகா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொடியிறக்க நிகழ்வு மீண்டும் இன்று (மே 20) தொடங்கவுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான அட்டாரி வாகா எல்லையில், திருத்தப்பட்ட புதிய நெறிமுறைகளின்படி மீண்டும் இன்று முதல் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், எல்லை வாயில்கள் திறப்பு மற்றும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே வழக்கமாக நடைபெறும் கைகுலுக்கல் போன்றவை இல்லாமல், இந்த கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ், இந்த நிகழ்வைக் காண இந்திய தரப்பில் இருந்து பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

அட்டாரி-வாகா எல்லையில் இரு நாடுகளுக்கு இடையிலான இந்த கொடியிறக்க நிகழ்வு 1959 முதல் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளின்படி, ஒவ்வொரு நாள் மாலையிலும் நடைபெறும் இந்த நிகழ்வின்போது அட்டாரி-வாகா எல்லையில் அமைந்துள்ள இரு நாடுகளின் எல்லைக் கதவுகளும் திறக்கப்பட்டு, இரு தரப்பு அதிகாரிகள் கைகுலுக்கிக்கொள்வார்கள்.

ஆனால் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, அட்டாரி எல்லையைப் பாதுகாக்கும் எல்லையோர பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.), பாகிஸ்தானுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பும் வகையில் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in