ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பாஜக கூட்டணி ஆட்சியமைக்கிறது

தெலுங்கு தேசம் 127 இடங்களிலும், ஜன சேனா 17 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பாஜக கூட்டணி ஆட்சியமைக்கிறது
ANI

ஆந்திரப் பிரதேசத்தில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி, தெலுங்கு தேசம், பாஜக கூட்டணி ஆட்சியமைக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேசத்துக்கு மே 13-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையும் காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில், ஆட்சியிலிருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மிகப் பெரிய அளவில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யானின் ஜன சேனாவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. தெலுங்கு தேசம் 127 இடங்களிலும், ஜன சேனா 17 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

2019 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 175 இடங்களில் 151 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in