வருடாந்திர, வாழ்நாள் சுங்க நுழைவுச் சீட்டுகள் விரைவில் அறிமுகம்?

தினமும் ஒரு சுங்கச் சாவடியை மட்டும் கடந்து சென்று வரும், அதற்கு அருகே வசிக்கும் நபர்களுக்கு ஏதுவாக தற்போது மாதாந்திர சுங்க நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
வருடாந்திர, வாழ்நாள் சுங்க நுழைவுச் சீட்டுகள் விரைவில் அறிமுகம்?
ANI
1 min read

எந்த சுங்கச் சாவடியிலும் நுழைந்து, எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லும் வகையிலான வருடாந்திர மற்றும் வாழ்நாள் சுங்க நுழைவுச் சீட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளை தொடர்ந்து உபயோகித்து வரும் தனியார் கார் உரிமையாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வருடாந்திர சுங்க நுழைவுச் சீட்டு (டோல் பாஸ்) நடைமுறையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

ரூ. 3,000 செலுத்தி பெற்றுக்கொள்ளும் வருடாந்திர சுங்க நுழைவுச்சீட்டை வைத்து நாடு முழுவதிலும் உள்ள எந்த ஒரு சுங்கச் சாவடியிலும், எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ரூ. 30 ஆயிரம் செலுத்தி 15 வருடங்கள் செல்லத்தக்க வாழ்நாள் சுங்க நுழைவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கான கருத்துருவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் உள்ளதாக இது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது.

தினமும் ஒரு சுங்கச் சாவடியை மட்டும் கடந்து சென்று வரும், அதற்கு அருகே வசிக்கும் நபர்களுக்கு ஏதுவாக தற்போது மாதாந்திர சுங்க நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. ஆதார் மற்றும் பிற விவரங்களை அளிக்கும் பட்சத்தில் வழங்கப்படும் இந்த மாதாந்திர நுழைவுச் சீட்டுகளை ரூ. 340-க்குப் பெறலாம்.

ஓர் ஆண்டிற்கான 12 மாதாந்திர நுழைவுச் சீட்டுகளுக்கு ரூ. 4,080 செலவாகும் எனும்போது, எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த சுங்கச் சாவடியில் வேண்டுமானாலும் நுழைந்து செல்லும் வகையில் ரூ. 3,000-க்கு வழங்கப்படும் வருடாந்திர நுழைவுச் சீட்டுகள் பொதுமக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in