திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு?: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு!

"அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் சந்திரபாபு நாயுடு".
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு?: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு!
ANI
1 min read

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்த நிலையில் அதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஜெகன் மோகன் அரசு மீது சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பான காணொளியில், “திருப்பதி கோயில் புனிதமான கோயில்களில் ஒன்று. ஜெகன் மோகன் ஆட்சியில் இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்த எக்ஸ் பதிவில் சுப்பா ரெட்டி குறிப்பிட்டுள்ளதாவது:

“திருப்பதி லட்டு குறித்து சந்திரபாபு கூறிய கருத்து மிகவும் மோசமானது. அவர் அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார். பக்தர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நானும், எனது குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம்”.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in